என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மறுவாக்கு பதிவு"
தேனி:
தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரசுவதி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 67 மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி சங்கர நாராயணன் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 167 ஆகிய 2 வாக்கு சாவடிகளிலும் வருகிற 19ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பாராளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் மறு வாக்கு பதிவு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்தல் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அனைத்து வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்த வாக்கு சாவடி பகுதிகளில் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுவாக்கு பதிவு நடப்பதை முன்னிட்டு ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே பணியில் உள்ள பறக்கும் படை குழுக்களுடன், தலா 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 வாக்கு சாவடிகளிலும் மறுவாக்கு பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.
மறுவாக்கு பதிவு பகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் என்ற செல்போன் ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். #LokSabhaElections2019
தர்மபுரியில் தேர்தலின்போது வாக்குசாவடிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அதனால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மோதல் ஏற்பட்டதால் அங்கும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் மோசடி நடந்ததாக வந்த புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடலூரில் 1, திருவள்ளூரில் 1, தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவேண்டுமா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பொது பார்வையாளரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை இன்று மாலை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சினை இல்லை. எனவே, பொன்பரப்பில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #TNElections2019 #Ponparappi
மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் துவங்குவதற்கு முன்பிருந்தே மாநிலத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. நேற்று முன்தினம் வாக்குப்பதிவின்போதும் வன்முறை தொடர்ந்தது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றியது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின. மாநிலம் முழுதும் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 43 பேர் படுகாயம் அடைந்தனர்.
வன்முறை தொடர்பாக சுயேட்சை வேட்பாளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார்களை அடுக்கினர். இதைத்தொடர்ந்து மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், ஹூக்ளி மாவட்டத்தில் 10 வாக்குச்சாவடிகள், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 28 வாக்குச்சாவடிகள், கூச் பெஹார் மாவட்டத்தில் 52 வாக்குச்சாவடிகள், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 63 வாக்குச்சாவடிகள், நாடியா மாவட்டத்தில் 60 வாக்குச்சாவடிகள், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 59 வாக்குச்சாவடிகள், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 26 வாக்குச்சாவடிகள், மால்டா மாவட்டத்தில் 55 வாக்குச்சாவடிகள், உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் 73 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 568 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #Panchayatelections #Repoll
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்